தமிழகத்தில் RTE திட்டத்திற்கான ஆர்வம் குறைந்தது – அரசு பரபரப்பு தகவல்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, August 2, 2021

தமிழகத்தில் RTE திட்டத்திற்கான ஆர்வம் குறைந்தது – அரசு பரபரப்பு தகவல்!


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் சலுகையுடன் மாணவர்களை சேர்க்கும் RTE திட்டத்திற்கான ஆர்வம் பெற்றோர்களிடையே குறைந்துள்ளது என்று அதிர்ச்சியான தகவலை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு தகவல்:

நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பு என தொடக்க வகுப்புகளில் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 8,300 தனியார் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 1,03,330 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக www.rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் 1.2 லட்சம் பேர் RTE மூலம் மாணவர்களை சேர்க்க விண்ணப்பம் செய்து, அதில் 70,300 பேர் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை சுமார் 64 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு மாணவர்கள் – பெற்றோர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.அருமைநாதன் அவர்கள், நடப்பாண்டில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்பதற்கே பெற்றோர்கள் விரும்புகின்றனர். RTE முறையில் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்தாலும், அதன்பின்னர் பல காரணங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் பலரும் இந்த ஆண்டு RTE முறையில் சேர்ப்பதற்கு தயங்குகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச கல்வி, சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், காலணி, பை, சைக்கிள், இலவச மதிய உணவு போன்றவையும் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Post Top Ad