வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்புவோர் கவனத்திற்கு - A to Z வழிகாட்டுதல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 6, 2021

வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்புவோர் கவனத்திற்கு - A to Z வழிகாட்டுதல்



கடல் கடந்து கல்வி பயில்வதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? இந்திய மாணவர்களுக்கு ஏற்ற கல்விச்சூழல் உள்ள நாடுகள் எவை? வெளிநாட்டில் பயில சரியான கல்வி நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி? சரியான வழிகாட்டு மையங்களை அணுகுவது எப்படி? எந்தெந்த பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது? பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை கிடைக்க வழிவகை உள்ளதா? வங்கிக்கடன் பெற உள்ள வழிமுறைகள் என்னென்ன? வெளிநாட்டில் முதுநிலை மருத்துவ படிப்புகளை படிக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெளிவாகப் பார்க்கலாம்.
வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் கவனத்துக்கு...

வெளிநாடுகளில் எந்த பல்கலைகழகங்கள், கல்லூரிகள் சிறந்தவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் கல்வி கற்க ஆகும் செலவு, கல்விக்கடன் குறித்து அறிந்து கொள்வது அவசியம். அதன்பிற்கு உதவித்தொகை, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரியில் இடம் கிடைத்தால் படிப்பிற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான விசா நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். நாம் செல்லவிருக்கும் நாட்டின் அரசியல், பொருளாதார சூழல், காலநிலை, உணவு பற்றி தெரிந்துகொள்வது நலம். சில நாடுகளில் படிக்க சில தேர்வுகளை எழுதி தேர்ச்சிபெற வேண்டியிருக்கும். இணையதளம் மற்றும் தனியார் ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடல் கடந்து கல்வி கற்க ஆர்வம் காண்பிக்கும் மாணவர்கள் தான் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு ஏற்ற நாடுகளைத் தேர்வு செய்வதில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் பயில ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருப்பது அவசியம். சில நாடுகளில் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.

கல்வி கற்க ஏற்ற நாடுகள் சில...

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், சீனா, ரஷ்யா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள்.

வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்க விரும்புவோர் ஓராண்டுக்கு முன்னரே தயாராக வேண்டும். பொதுவாக 3 வழிமுறைகளில் வெளிநாடுகளில் கல்வி பயில முடியும். 12ஆம் வகுப்பு படித்துவிட்டு இளநிலை படிப்புகளுக்காக வெளிநாடு செல்லலாம். இளநிலை படிப்புகளை இந்தியாவில் முடித்துவிட்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லலாம். மேற்படிப்புகளை இந்தியாவில் முடித்தவர்கள் வெளிநாடு சென்று ஆராய்ச்சி படிப்புகளைப் படிக்கலாம். ஒவ்வொரு படிப்புகளுக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறைகள் உள்ளன. வெளிநாடுகளில் கல்வி பயில தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


Post Top Ad