75 வது சுதந்திர தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, August 6, 2021

75 வது சுதந்திர தின விழா பள்ளிகளில் கொண்டாடுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!நமது இந்திய திருநாட்டின் 75 - வது சுதந்திர தின விழாவினை 15.08.2021 அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் | அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் : 

1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை . சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.

2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும். 

3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் . சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

4. கொரோணா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம். 

குறிப்பு :

 சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக் கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.

கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட்- 19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.

மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Rag Code of India 2002 - ன் படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் ( Covld -19 ) தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 15.08.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று இந்திய திருநாட்டின் 75 - வது சுதந்திர தின விழாவினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினவிழவினை கொண்டாடிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post Top Ad