சென்னை: விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களைகொள்முதல் செய்ய அரசுநடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் விவசாயிகள்கொண்டு வரும் நெல் மூட்டைகளைகொள்முதல் செய்ய 40 ரூபாய்லஞ்சம் கேட்பதாக பரவலாகவிவசாயிகள் தொடர்ந்துகுற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். இதற்கிடையே,தமிழகத்தில் நெல் கொள்முதல்நிலையங்களை அதிகரிக்க கோரிசென்னையை சேர்ந்தசூரியப்பிரகாசம் என்பவர்உயர்நீதிமன்ற மதுரை கிளையில்ஒரு பொதுநல வழக்கினை தாக்கல்செய்திருந்தார்.
இந்தவழக்கு கடந்த மாதம் 10-ம்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளைநீதிபதிகள், கிருபாகரன், புகழேந்திஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது,அரசு உயர் அதிகாரி தமதுஊதியத்தை தாண்டி லஞ்சமாகபெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம்என்று நீதிபதிகள் வேதனைதெரிவித்தனர். தொடர்ந்து, கடந்தவாரம் விசாரணைக்கு வந்தபோது,தமிழகத்தில் எத்தனை கொள்முதல்நிலையங்கள் உள்ளன. எத்தனைகொள்முதல் நிலையங்கள்அதிகரிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு என்ன அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளதுஎன்பதை விரிவான அறிக்கையாகதாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்த போது, தமிழகஅரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டஅறிக்கையில், தமிழகத்தில் 800நெல் கொள்முதல் நிலையங்கள்உள்ளன. மேலும், நெல்கொள்முதல்நிலையங்களை அதிகரிக்கபோதிய நடவடிக்கை எடுத்துவருகிறது. நெல்கொள்முதல்நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம்வாங்குவதாக வெளியான செய்திமுற்றிலும் தவறாக செய்தி என்றுதெரிவித்திருந்தது. அறிக்கையில்அடுத்த பக்கம் முறைகேடுகளில்ஈடுபட்ட 150 அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கையை படித்து பார்த்தநீதிபதிகள் கடும் கோபம் அடைந்து,ஒரு அதிகாரி லஞ்சம்வாங்கவில்லை என்று தகவல்தெரிவித்துவிட்டு, அடுத்த வரியில்லஞ்சம் வாங்கியதாக 150அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.நீதிமன்றத்தை அரசு அதிகாரிகள்ஏமாற்றும் நோக்கத்துடன் அறிக்கைதாக்கல் செய்துள்ளனர். இதுஏற்புடையது அல்ல.
இரவு, பகல் பாராமல் தங்கள்விவசாய நிலங்களில் பாடுபட்டுவிவசாயம் செய்து பிறருக்குஉணவூட்டும் வகையில் தங்களதுநெல்களை விற்பனைமையங்களுக்கு கொண்டு வரும்விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும்அதிகாரிகளை தூக்கிலிட்டால்என்ன? என்று கேள்வி எழுப்பியநீதிபதிகள், லஞ்சம் வாங்குவதுபுற்றுநோயைவிட கொடியது.லஞ்சம் நாட்டை புற்றுநோய் போல்அரித்துக்கொண்டிருக்கிறதுஎன்றனர். மேலும், தமிழகத்தில்உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கும்எத்தனை அதிகாரிகள் மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டஅதிகாரிகள் எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 10ஆண்டுகளில் விவசாயிகள்வாங்கிய ஊழியம் என்ன, அதேகாலகட்டத்தில் அரசு அதிகாரிகளின்ஊழியம் என்ன? என்ற என்ற புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசுகூடுதல் அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டு வழக்கின்விசாரணையை அடுத்த வாரத்திற்குஒத்திவைத்தனர்.
0 Comments:
Post a Comment