தமிழ்நாட்டில் பள்ளிகளை 16-ந்தேதி அன்று திறக்கப்படுவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பள்ளிகள் திறக்கப்படுவதை வரும் பொங்கல் திருநாள் வரை தள்ளி வைக்க வேண்டும் என, பட்டதாரி ஆசிரியர் சங்க நிறுவனத்தலைவர் அ.மாயவன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், "தமிழகத்தில் பள்ளிகளை 16-ந்தேதி முதல் திறக்கலாமா? என்பதை பற்றி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோரின் கருத்துகளை அறிந்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ள முதல்-அமைச்சரை பாராட்டி மகிழ்கிறோம்.
கொரோனாவின் கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடில்லை. எதிர்வருகின்ற காலம் கடுமையான மழை காலமும், குளிர்காலமும் ஆகும். கொரோனாவுக்கு இந்த காலநிலைமை மிகவும் கொண்டாட்டம். மேலும் அவை பல்கிப்பெருக உகந்த நல்ல வாய்ப்பாக அமையும். கொரோனா தொற்று குறைந்துவரும் நாடுகளில் கூட மீண்டும் கொரோனா விசுவரூபம் எடுத்து அதன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது.
எனவே தமிழ்நாட்டில் பள்ளிகளை 16-ந்தேதி அன்று திறக்கப்படுவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து பள்ளிகள் திறக்கப்படுவதை வரும் பொங்கல் திருநாள் வரை தள்ளி வைக்க வேண்டும்." என்று அந்த கடிதத்தில் அ.மாயவன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment