கொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்? கேள்விகளும் விளக்கங்களும்: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 19, 2020

கொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்? கேள்விகளும் விளக்கங்களும்:


கடந்த இரண்டு வாரங்களில், பிஃபைசர், பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், தங்களின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிகரமாக நடந்து இருப்பதாக தெரிவித்தார்கள்.

மற்ற நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. ஜன்சன் என்கிற பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் மூன்றாவது பெரிய சோதனை, பிரிட்டனில் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

நமக்கு ஏன் கொரோனா தடுப்பு மருந்து வேண்டும்?

உங்கள் வாழ்கை மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்றால், நமக்கு கொரோனா மாற்று மருந்து தேவை.

இப்போது கூட பெரும்பாலான மக்கள், கொரோனாவால் பாதிக்கப்படலாம். நம் வாழ்கையில் விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் தான், பல மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஒரு கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா பாதிப்புகளை எதிர்த்து, நம் உடல் எப்படி பாதுகாப்பாக சண்டை இட வேண்டும் என கற்றுக் கொடுக்கும். இந்த கொரோனா தடுப்பு மருந்து, கொரோனாவால் நாம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் அல்லது குறைந்தபட்சம், கொரோனாவால் உயிர் இழப்புகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளோடு, கொரோனா தடுப்பு மருந்து இருப்பது தான், கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கான வழி.

எந்த கொரோனா தடுப்பு மருந்து வெற்றி அடைய அதிக வாய்ப்பு இருக்கிறது?

பிஃபைசர்/பயோஎன்டெக் நிறுவனங்கள் தான், தங்களின் தடுப்பு மருந்து தொடர்பான இறுதி கட்ட சோதனை விவரங்களை பகிர்ந்து கொண்ட முதல் பார்மா கம்பெனி.

இந்த நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து, 90 சதவிகித மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்கிறது தரவுகள்.

இதுவரை சுமாராக 43,000 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை எந்த பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் எழவில்லை.

மாடர்னா நிறுவனம், அமெரிக்காவில் 30,000 மக்கள் மீது தன் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடத்தியது. அதில் பாதி பேருக்கு டம்மி ஊசிகள் செலுத்தப்பட்டன.

மாடர்னாவின் கொரோனா தடுப்பு மருந்து, 94.5 சதவிகித மக்களை பாதுகாப்பதாகச் சொல்கிறது. முதலில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 95 பேரில் ஐந்து பேருக்கு மட்டுமே, கொரோனா அறிகுறிகள் வந்தது. அவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறது மாடர்னா.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து உற்பத்தியாளர்களின், கொரோனா தடுப்பு மருந்து சோதனை முடிவுகள், அடுத்த சில வாரங்களில் வெளியாக இருக்கின்றன.

இதற்கிடையில், ரஷ்யாவின் ஸ்புட்நிக் Vs கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான, ஊக்கமளிக்கும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மூன்றாம் கட்ட சோதனைகளின் இடைக்கால முடிவுகள் அடிப்படையில், பைசர் தடுப்பு மருந்தின் அளவைத் தொட்டு இருக்கிறது ரஷ்ய தடுப்பு மருந்து. ரஷ்யாவின் ஸ்புட்நிக் V 92% திறன் கொண்டதாக இருக்கிறது என்கிறார்கள் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்.

இன்னும் என்ன தடுப்பு மருந்துகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன?

வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில், மேம்பட்ட கொரோனா தடுப்பு மருந்து சோதனைகளைச் செய்து கொண்டிருக்கும், பல்வேறு அணிகளின், முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

ஜன்சின் சோதனை, பிரிட்டனில் 6,000 பேரைத் தேர்வு செய்ய தொடங்கி இருக்கிறது. மற்ற நாடுகளும் ஒன்று சேர்ந்து, மொத்தம் 30,000 பேரைத் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த கம்பெனி, தன் கொரோன தடுப்பு மருந்தை வைத்து, ஒரு பெரிய சோதனையை நடத்தியது. அதில் பங்கெடுத்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது. இந்த பணி மூலம், இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள், வலுவான மற்றும் நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியைக் தருகிறதா எனப் பார்க்க உதவும்.

இன்னும் சில கொரோனா தடுப்பு மருந்துகள், சோதனையின் கடைசி கட்டத்தில் இருக்கின்றன. இதில் சீனாவில் இருக்கும் வூஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயொலாஜிகல் ப்ராடெக்ட் மற்றும் சினோபார்ம் மற்றும் ரஷ்யாவின் கெமலியா ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் தடுப்பு மருந்துகளும் அடக்கம்.

சீனோவேக் என்கிற சீன கம்பெனியின், கொரோனா தடுப்பு மருந்து, பிரேசிலில் சோதனையில் இருந்தது. இந்த மருந்து கடுமையான எதிர்வினைகளைக் காட்டும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த மருந்து சோதனையின் போது ஒரு தன்னார்வலர் இறந்துவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

தற்போது ஆராய்ச்சியில் இருக்கும் கொரோனா மாற்று மருந்துகள் எப்படி வித்தியாசப்படுகின்றன?

உடலில் இருக்கும் வைரஸை எந்த பாதிப்பும் இல்லாமல், நம் உடலில் நோய் ந்திர்ப்பு மண்டலத்துக்கு காட்டிக் கொடுப்பது தான் ஒரு கொரோனா தடுப்பு மருந்தின் வேலை. அதன் பிறகு, நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், வைரஸை ஒரு வெளி நபராகக் கண்டு கொள்ளும். அதன் பின், வைரஸோடு எப்படி சண்டை போட வேண்டும் என கற்றுக் கொள்ளும்.

இதைச் செய்ய பல வழிகள் இருக்கின்றன.

பைசர்/பயோஎண்டெக் மற்றும் மாடர்னா மேம்படுத்தி இருக்கும் தடுப்பு மருந்து ஆர் என் ஏ என்று சொல்லலாம். இது ஒரு சோதனை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு பயிற்சி அளிக்க, உடலில் வைரஸின் ஜெனடிக் கோட்களை உட்செலுத்துவார்கள்.

ஜன்சன் தடுப்பு மருந்து, ஒரு பொதுவான சளி வைரஸை, ஒரு ஆபத்து இல்லாத வைரஸாக மாற்றி, மூலக்கூறு நிலையில் கொரோனா வைரஸ் போல மாற்றுகிறார்கள். இது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனாவைரஸை எதிர்த்துப் போராட வேண்டும்.

இதே போலத் தான், ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ரஷ்ய தடுப்பு மருந்துகள், சிம்பன்சிகளை தொற்றி இருக்கும், பாதிப்பு இல்லாத வைரஸை எடுத்து, அதை மரபணுரீதியாக மாற்றி, கொரோனா வைரஸ் போல காணச் செய்து, எதிர்வினைகளைப் பெற முயற்சிக்கிறார்கள்.

இரண்டு சீன கொரோனா தடுப்பு மருந்துகள், உண்மையாகவே கொரோனா வைரஸைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் வைரஸ் முடக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வைரஸால் பாதிப்பு ஏற்படக் கூடாது என இந்த ஏற்பாடு.

இதில் எந்த முறை, நமக்கு அதிகம் பலன் கொடுக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். Challenge Trails என்று அழைக்கப்படும் சோதனைகள், இந்த கேள்விக்கான விடையைக் கண்டு பிடிக்க உதவும். இந்த வகையான சோதனைகளில், வேண்டும் என்றே கொரோனா தொற்று ஏற்படுத்தப்படும்.

எப்போது கொரோனா மாற்று மருந்து கிடைக்கும்?

பிஃபைசர் இந்த ஆண்டின் இறுதிக்கும், 50 மில்லியன் டோஸ் மருந்துகளை சப்ளை செய்ய முடியும் என நம்புவதாகச் சொல்கிறது பைசர். 2021-ம் ஆண்டுக்குள் 1.3 பில்லியன் டோஸ் உற்பத்தி செய்யப்படலாம் என்கிறது.

பிரிட்டன் நாடு முதலில் 10 மில்லியன் டோஸ் மருந்துகளை இந்த 2020-ம் ஆண்டுக்குள் பெற வேண்டும். இது போக, ஏற்கனவே ஆர்டர் செய்த 30 மில்லியன் டோஸ் மருந்து வேறு இருக்கிறது.

பிரிட்டனுக்கு மட்டும், ஆஸ்ட்ரசெனிகா/ஆக்ஸ்ஃபோர்ட் 100 மில்லியன் டோஸ் மருந்துகளை சப்ளை செய்ய சம்மதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 2 பில்லியன் டோஸ்களை சப்ளை செய்ய சம்மதித்து இருக்கிறது.

5 மில்லியன் டோஸ் மாடர்னா கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க தொடக்க காலத்திலேயே ஒரு ஒப்பந்தம் இருப்பதாக, பிரிட்டனின் சுகாதார அமைச்சர் மேட் ஹன்காக், சொல்லி இருக்கிறார். இந்த மருந்து வரும் வசந்த காலத்துக்குள் கிடைக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்.

யாருக்கு முதலில் கிடைக்கும் இந்த கொரோனா தடுப்பு மருந்து?

கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் போது, எங்கு அதிகம் கொரோனா பரவுகிறது மற்றும் யார் மீது இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் சிறப்பாக செயல்படுகிறது என்பதைப் பொறுத்து மாறுபடும்.

Old Care Home Residents மற்றும் Care Home Staff என்று அழைக்கப்படும் பணியாளர்கள் தான் பிரிட்டனின் முன்னுரிமைப் பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு தான் பிரிட்டனின் சுகாதாரப் பணியாளர்களான மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு என்கிறது பிரிட்டன்.

வயது, இதுவரை, கொரோனாவின் மிகப் பெரிய ரிஸ்க் காரணி.

இன்னும் என்ன செய்ய வேண்டும்?

சோதனைகள், தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்கிறது எனக் காட்ட வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்து, கொரோனாவால் மக்கள் நோயுறுவதைத் தடுக்க வேண்டும் அல்லது, கொரோனாவால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

பல பில்லியன் டோஸ் மருந்துக்கு, பெரிய அளவில் தடுப்பு மருந்து வேலைகள் மேம்படுத்தப்பட வேண்டும்

இந்த மாற்று மருந்தைக் கொடுப்பதற்கு முன், மருந்து நெறிமுறையாளர்கள், அனுமதிக்க வேண்டும்.

உலகில் 60 - 70 சதவிகித மக்கள், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, போதுமான நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என எண்ணப்படுகிறது.

ஒரு கொரோனா தடுப்பு மருந்து எல்லோரையும் பாதுகாக்குமா?

மக்கள் நோய் எதிர்ப்புக்கு வித்தியாசமாக எதிர்வினையாற்றுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக, வயதானவர்கள் மீது, எந்த ஒரு தடுப்பு மருந்தும், அதிகம் வெற்றிகரமாகச் செயல்படாது. காரணம், வயதான நோய் எதிர்ப்பு மண்டலம் அத்தனை சிறப்பாக செயல்படாது.

பல முறை மருந்து கொடுப்பதன் மூலம், இந்த பிரச்சனையைக் கடந்து வரலாம். இதை ஒரு ரசாயணத்தோடு சேர்த்து கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படலாம்.

source: bbc.com/tamil

Post Top Ad