ஆசிரியர்கள் உதவியால் ஏழை மாணவனுக்கு கிடைத்த டாக்டர் 'சீட்'


 ஓசூர்: அஞ்செட்டி அருகே, ஆசிரியர்கள் உதவியால் படித்த மாணவர், 'டாக்டர் சீட்' பெற்றுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சீங்கோட்டையை சேர்ந்த முத்துசாமி, 47; கூலித்தொழிலாளி. இவர் மகன் விஸ்வநாதன், 18. இவரது ஒன்பதாவது வயதில் தாய் கவுரி உயிரிழந்ததால், தந்தை பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சீங்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு சேர்ந்த போது, அவரது தந்தை வறுமை காரணமாக படிக்க அனுப்பாமல், செங்கல்சூளைக்கு வேலைக்கு அழைத்து சென்றார்.

விஸ்வநாதன் படிப்பு திறமையை அறிந்த அப்பள்ளி ஆசிரியர் ஹென்றி, மாணவனை மீட்டு மீண்டும் பள்ளியில் படிக்க வைத்தார். அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2019ல் பிளஸ் 2 தேர்வில், 502 மதிப்பெண் பெற்றார். வீட்டில் இருந்தவாறு நீட் தேர்விற்கு படித்து, பங்கேற்ற விஸ்வநாதன், 198 மதிப்பெண் மட்டுமே பெற்றதால், டாக்டர் கனவு நனவாகாமல் போனது. இதையடுத்து, தலைமையாசிரியர் சண்முகம், உதவி ஆசிரியர் கணேசமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் ஆதரவுடன், சேலம் ஸ்பெக்ட்ரா அகாடமியில் சேர்ந்து படித்த மாணவன் விஸ்வநாதன், நடப்பாண்டு நீட் தேர்வில், 505 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்ததால், மாநில அளவில், 13வது இடம் பெற்ற விஸ்வநாதனுக்கு, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படிக்க, தமிழக முதல்வரால் சீட் வழங்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive