̀2021-ல் 87 சதவிகித நிறுவனங்களில் ஊதிய உயர்வு இருக்கும்!' - ஆய்வறிக்கையில் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 5, 2020

̀2021-ல் 87 சதவிகித நிறுவனங்களில் ஊதிய உயர்வு இருக்கும்!' - ஆய்வறிக்கையில் தகவல்


2021-ம் ஆண்டுக்கான சராசரி ஊதிய உயர்வு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாகப் பெரும்பாலான தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் காரணமாக, ஊதிய உயர்வைப் பற்றிய சிந்தனையே ஊழியர்கள் மத்தியில் இல்லாமல் இருந்தது என்றே கூறலாம்.


நஷ்டத்தைச் சந்திக்காத சில நிறுவனங்களும் குறைவான ஊதிய உயர்வையே வழங்கின. நடப்பாண்டில் (2020) வழங்கப்பட்ட சராசரி ஊதிய உயர்வு 6.1% மட்டுமே. இந்தியாவில் கடந்த 25 ஆண்டுக் காலத்தில் இதுதான் மிகவும் குறைவு. இதற்கு முன்னர் 2009-ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, சராசரி ஊதிய உயர்வு 6.3 சதவிகிதமாக இருந்ததே குறைவானதாக இருந்தது.


இந்தச் சூழலில், இந்தியாவில் ஆய்வு மேற்கொண்ட Aon என்ற சர்வதேச நிதி நிறுவனம், 2021-ம் ஆண்டில் 87% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கத் திட்டமிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1,050 நிறுவனங்களிடம் நடந்திய ஆய்வு முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது.


அவற்றில் 61% நிறுவனங்கள் 5-10% ஊதிய உயர்வு வழங்கத் திட்டமிட்டு வருகின்றனவாம். 2021-ம் ஆண்டுக்கான சராசரி ஊதிய உயர்வு 7.3 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பெருந்தொற்று காலத்தில் இழப்பு ஏற்படாமல் தப்பித்த 29% நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வே அளிக்கவில்லையாம். 46% நிறுவனங்கள் 5-10%, 16% நிறுவனங்கள் 10% உயர்வும் வழங்கியுள்ளன. ஐ.டி, பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள்தான் அதிக அளவில் ஊதிய உயர்வை அளித்துள்ளன. மற்றொருபுறம், ஹாஸ்பிடாலிட்டி, ரியல் எஸ்டேட், பொறியியல் சேவை துறைகள் ஆகியவை ஊதிய உயர்வில் மிகவும் மோசமான பங்களிப்பைச் செலுத்தியுள்ளன.

இது தவிர, இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான விஷயமும் தெரியவந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் அதிகமாக புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அந்தப் பணியை நிறுத்தி வைத்திருந்தன. ஆள்குறைப்பையும் செய்தன. அதுபோன்ற நிறுவனங்களில் 2021-ம் ஆண்டின் மூன்றாவது நான்காவது காலாண்டு வரை இதே நிலைதான் தொடரும். புதிய பணி நியமனங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Post Top Ad