ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு.



கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் , 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள் முதல் பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே தொடங்கிய முதல் நாள் அன்றே, பள்ளிகளில் சுகாதாரத்துறை நடத்திய மருத்துவ பரிசோதனையில், 57 ஆசிரியர்கள் மற்றும் ஆறு மாணவர்களுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பள்ளிகளை திறந்த அரசின் முடிவுக்கு ஆந்திர மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive