சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியல் வெளியீடு: சென்னை ஐஐடி முதலிடம்...அண்ணா பல்கலை. 7-வது இடம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 11, 2020

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியல் வெளியீடு: சென்னை ஐஐடி முதலிடம்...அண்ணா பல்கலை. 7-வது இடம்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியல் வெளியீடு: சென்னை ஐஐடி முதலிடம்...அண்ணா பல்கலை. 7-வது இடம்

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்வி நிலையங்களுக்கான தரவரிசை வெளியிடும் நிகழ்வு கடந்த 2015 ஆண்டு  செப்டம்பர் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

இதன்படி, பொறியியல் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள  மேம்பாட்டுத்துறை வெளியிடுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்  பெற்றுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்:

* அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 7-வது இடம்.
* பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை) 14-வது இடம்.
* சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை ) 20-வது இடம்.
* காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (காரைக்குடி) 28-வது இடம்.
* சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் (சென்னை ) 32வது இடம்.

Post Top Ad