Teachers ID Card Form - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, March 3, 2021

Teachers ID Card Form

Teachers ID Card Form
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2020-21 ம் கல்வியாண்டில் Project Innovations ( Elementary , Secondary & Hr.Secondary ) எனும் தலைப்பின்கீழ் மாவட்டத்திலுள்ள அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு புகைப்படம் , QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட ஆண்டு வரைவு திட்டத்தில் திட்ட ஏற்பளிப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது . 

எனவே , அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். வட்டார வளமையத்தின் மூலமாக பெறப்பட்ட படிவத்தை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அடையாள அட்டை இல்லாத ஆசிரியர்களிடம் வழங்கி , அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து , தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கூடிய பிரதியை தங்கள் பள்ளி சார்ந்த வட்டார வளமையத்தில் வழங்குதல் வேண்டும்.

பள்ளிவாரியாக பெறப்பட்ட படிவங்களை ஒன்றியவாரியாக தொகுத்து , தனிநபர் வாயிலாக இவ்வலுவலகத்தில் நாளை ( 03.03.2021 ) மதியம் 4.00 மணிக்குள் வழங்குமாறு அனைத்து வட்டார வளமைய ( பொ ) மேற்பார்வையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் , ஆசிரியர்களுக்கு படிவம் வழங்கும்போது , புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , பணிமாறுதலில் சேர்ந்துள்ள ஆசிரியர்கள் , பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பழுதடைந்த அட்டையை புதுப்பிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி , இப்பணியினை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : விபரப்படிவம்: Teachers ID Card Form - Download here...

Post Top Ad