தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பெருமளவில் பரவிவருதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாணவர்கள் நலன்காக்க வேண்டும் - சா.அருணன் - நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு வேண்டுகோள்


கடந்த ஜனவரி 19 முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது பின்பு 9 ம் வகுப்பு  மற்றும் 11ம் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்படு வருகிறது கடந்த சில வாரங்களாக மாணவ மாணவிகளுக்கு கொரோனா பெருந்தொற்று  வேகமாக பரவிவருகிறது , தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பட்டை அரசு உதவி பெரும் பெண்கள் மேனிலைப்பள்ளியில்  பள்ளி மாணவிகள 20 பேருக்கு நேற்றுத் தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு  56 மாணவிகளையும் பல்வேறு மருத்துமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள்  


சுகாதாரத்துறையே தமிழகத்தில் கொரோனா இண்டாம் அலைக்கற்றை தொற்று வேகமாக பரவிவருகிறது என எச்சரித்து வருகின்ற சூழ்நிலையில் தொடர்ந்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பரவல் வேகமாக பரவும் ஏனென்றால் பள்ளியில் இருக்கும்வரை மாணவர்கள் ஆசிரியர்களின் கட்முப்பாட்டில் இருக்கின்றனர் , பள்ளி வளாகத்திற்கு வருவதற்கு முன்னும்   பின்பு வெளியில் செல்லும்போது கட்டுப்பாடுயின்றி  தொற்றின் நிலை அறியாமல் இருக்கின்றனர் எனவே மாணவர்கள் நிலையறிந்து அவர்கள் நலன் காக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உயர்திரு முதன்மை செயலாளார் மற்றும்  உயர்திரு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

~~~~~~~

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

9445454044





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive