ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர்வு, கடந்த மார்ச் 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடந்தது. அதற்காக, 6.19 லட்சம் மாணவர்கள் விண்ணப்பத்துஇருந்தனர்.
இந்நிலையில், அந்த தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டன. முழு நுாறு மதிப்பெண்கள் பெற்று, 13 மாணவர்கள், முதலிடத்தை பகிர்ந்துஉள்ளனர். அதன்படி, தமிழகத்தின் அஷ்வின் ஆப்ரஹாம்; டில்லியைச் சேர்ந்த சித்தார்த் கால்ரா மற்றும் காவ்யா சோப்ரா; தெலுங்கானாவைச் சேர்ந்த பன்னுரு ரோஹித் குமார் ரெட்டி, மாதுர் ஆதர்ஷ் ரெட்டி மற்றும் ஜோஸ்யுலா வெங்கட ஆதித்யா. மேலும், மேற்கு வங்கத்தின் பிராதின் மோண்டால்; பீஹாரின் குமார் சத்யதர்ஷி; ராஜஸ்தானைச் சேர்ந்த, ரோஹித் குமார், மிருதுல் அகர்வால் மற்றும் ஜெனித் மல்ஹோத்ரா; மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அதர்வா அபிஜித் தம்பத் மற்றும் பக்ஷி கார்கி உள்ளிட்ட, 13 மாணவர்கள், முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.