தபால் ஓட்டு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை விளக்கம் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, March 30, 2021

தபால் ஓட்டு - சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியை விளக்கம் :


postel
தபால் ஓட்டு யாருக்கு போட்டோம் என்பதை படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, தபால் ஓட்டு போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு, யாருக்கு பதிவு செய்தோம் என்பதை, ஆதாரத்துடன், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்து, தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவு: தென்காசி கல்வி மாவட்டம், கீழப்பாவூர் சரகம், சுரண்டை, ஆர்.சி., நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர், தபால் ஓட்டு பதிவு செய்து, அதை முகநுால் மற்றும் 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டுள்ளார்.
ஆசிரியை விளக்கம்:

இது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். இது குறித்து, தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், புகார் அளித்துள்ளார். இதையடுத்து,மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட ஆசிரியை, பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள், தென்காசி கலெக்டரிடம் அளித்துள்ள புகாரில், தன் தபால் ஓட்டை, வேறு யாரோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் தபால் வாக்குகளை செல்போனில் படம் எடுத்துக் கொண்டாலும் அதை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் தென்காசி மாவட்டத்தில் ஸ்டேட்டஸ் வைத்த பெண் ஆசிரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் தாங்கள் அளித்த வாக்குச் சீட்டின் விவரங்களை மற்றவருடன் பகிர வேண்டாம்.


Post Top Ad