தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு விரைவில் துவக்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, February 10, 2021

தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு விரைவில் துவக்கம்


அனைத்துவகுப்புகளும் விரைவில்துவக்கம் .

சென்னை: பள்ளிகளில், அனைத்துவகுப்புகளையும் துவங்குவதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள்ஆலோசித்துவருகின்றனர். சுகாதாரத்துறை ஒப்புதலை பெற்றபின், முடிவுஎடுக்கப்படும் எனதெரிகிறது.

🛑 கொரோனாபாதிப்புகுறைந்துள்ளதால், கல்லுாரிகளில், அனைத்துவகுப்புகளும், நேற்றுமுன்தினம்துவங்கின. பள்ளிகளில், ஒன்பதுமுதல், பிளஸ்2 வரை, வகுப்புகள்துவங்கியுள்ளன. 🛑 இந்நிலையில், மீதமுள்ள, ஒன்று முதல், எட்டுவரையான வகுப்புகளைதுவங்குவது தொடர்பாக, பள்ளி கல்விதுறைஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரிபள்ளிகளில், ஒரு மாதமாக, அனைத்துவகுப்புகளும் நடந்துவருகின்றன. அங்கு, கொரோனாபரவல் இல்லை என்பது, ஆய்வுகளில்தெரியவந்துள்ளது. 🛑 அதன்படி, தமிழகத்திலும் அனைத்துவகுப்புகளையும் துவங்கலாம்என, பள்ளி கல்வி துறைகருதுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, சுகாதாரத் துறை ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டுஉள்ளது.

ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களை பொறுத்தவரை, விளையாடுவதும், சுற்றுவதுமாகஉள்ளனர். அவர்களுக்கு வகுப்புகள்நடத்தாவிட்டால், படிப்பை மறந்துவிடும்ஆபத்து உள்ளது. 🛑 கொரோனாவை காரணமாக வைத்து, பள்ளிகளைதிறக்காமல் இழுத்தடிக்ககூடாது என, பெற்றோர்முறையிடுகின்றனர். வணிகமையங்கள், பொழுதுபோக்குஇடங்கள்மற்றும் திருமணம்போன்றநிகழ்ச்சிகளுக்கு, சிறுவர், சிறுமியரை, பெற்றோர் அழைத்துசெல்கின்றனர். அதனால், பள்ளிகளுக்கு பிள்ளைகளைஅனுப்புவதில், பெற்றோருக்கு பிரச்னைஇருக்காது. இவ்வாறு, அவர்கள்கூறினர்.

Post Top Ad