ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, பள்ளிகளை முழுமையாக திறந்து, இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.


 

ஒன்றுமுதல் எட்டாம் வகுப்புவரையிலான மாணவர்களுக்காக,பள்ளிகளை முழுமையாக திறந்து,இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்ததிட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்றுபடிப்படியாக குறைந்துவருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள்படிப்படியாககுறைக்கப்பட்டு, இயல்புவாழ்க்கை திரும்பியுள்ளது. கல்லுாரிகள் முழுமையாகதிறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை, நேரடி வகுப்புகள்நடத்தப்படுகின்றன.மாணவர்களுக்குநடத்தப்பட்ட, கொரோனா

சோதனைகளில், புதியதொற்று பாதிப்புகண்டறியப்படவில்லை

இந்நிலையில், இந்த கல்வியாண்டு, இன்னும் மூன்று மாதங்களில்முடியஉள்ளது. ஒன்று முதல்எட்டாம் வகுப்புவரையிலான மாணவர்கள், இந்தஆண்டு ஒரு நாள்கூட, பள்ளிக்குவராததால், அவர்களுக்குகுறைந்தபட்சம், இரண்டுமாதங்களாவது, நேரடிவகுப்புகளைநடத்த வேண்டும் என, பெற்றோரும், பள்ளி நிர்வாகிகளும்கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நடப்புகல்வியாண்டில், தங்கள்வகுப்பையும், ஆசிரியர்களையும், நேரில் பார்க்க முடியாதநிலைஉள்ளதால், உளவியல் ரீதியாக, மாணவர்கள்உற்சாகமின்றி உள்ளனர். அவர்களை நேரடிவகுப்பில்ஈடுபடுத்துவதால் மட்டுமே, கற்றலில் உற்சாகத்தை ஏற்படுத்தமுடியும் என, பெற்றோர்கள்தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏப்ரல் அல்லது மேமாதத்துக்குபின், கோடை விடுமுறைவருவதால், அதற்கு முன், மாணவர்களை, பள்ளிகளுக்குவரவழைத்து விடவேண்டும் என, ஆசிரியர்களும்விரும்புகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறைதரப்பில், கருத்துருதயாரிக்கப்பட்டுள்ளது. தற்போதையநிலையில், கொரோனாகட்டுப்பாடுகளைதளர்த்தினால்மட்டுமே, அனைத்துமாணவர்களையும், பள்ளிகளில்அமரவைக்க முடியும்:இல்லையென்றால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறைஏற்படும் என்பதால், சுகாதாரத்துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அதன்பின், முதல்வரின் அனுமதியுடன், பள்ளிகள் திறப்பு அறிவிப்புவெளியாகும்என, பள்ளி கல்விவட்டாரங்கள்தெரிவித்துள்ளன





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive