மறைந்த தமிழாசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், 12 லட்சம் ரூபாய் செலவில் சிலை திறந்து, நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லுாரியின், தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லுாரி நிறுவனர் விருத்தாசலனார்.இவர், சென்னை பல்கலையில், 'லட்சினையில் கற்றனைத்துாறும் அறிவும் ஆற்றலும்' என்ற தமிழ்த்தொடரை இடம் பெற செய்தவர். சென்னை பல்கலை, பாரதிதாசன் பல்கலையில், ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில், 30 ஆண்டு காலம் பணியாற்றினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மாணவர் நலனுக்கும் பாடுபட்டு, தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
தமிழறிஞர் விருத்தாசலனாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, சிலை வைக்க தீர்மானித்தனர்.இதன்படி, 12 லட்சம் ரூபாய் செலவில், வெண்கலத்தில் செய்யப்பட்ட விருத்தாசலனார் முழு உருவச் சிலையை, நாட்டார் திருவருட் கல்லுாரி வளாகத்தில் நிறுவியுள்ளனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
Home »
 » 12 லட்சம் ரூபாய் செலவில் தமிழாசிரியருக்கு சிலை மாணவர்கள் அசத்தல் :







 
0 Comments:
Post a Comment