அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 27, 2021

அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்றுநர் பணி வரும் 29 - க்குள் விண்ணப்பிக்கலாம்.


அம்பத்தூர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு தகுதியானோர் வரும் 29 - ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இப்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன் பிரிவில் பயிற்றுநர் பணியிடம் காலியாக உள்ளது . இப்பணி பொது மற்றும் தனிநபர் கூட்டமைப்பு திட்டம் மூலம் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பணியாக நிரப்பப்பட உள்ளது . இதற்கு குறிப்பிட்ட பிரிவில் பொறியியல் பட்டம் பெற்று ஓர் ஆண்டு அனுபவம் அவசியம் . அத்துடன் , எஸ் . சி . ( அருந்ததியர் ) 21 வயதுக்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும் , இப்பணி 11 மாத ஒப்பந்த காலத்துக்கு மாதந்தோறும் ரூ .14 ஆயிரம் வழங்கப்படும் . இப்பணிக்கு வரும் 29 - ஆம் தேதிக்குள் உரிய சான் றுகளுடன் விண்ணப்பிக்கலாம் . இது குறித்து அரசு ஐ.டி.ஐ.யின் துணை இயக்குநர் மற்றும் முதல்வர் நேரிலோ அல்லது 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் .

Post Top Ad