பிப்ரவரி 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 31, 2021

பிப்ரவரி 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்திருக்கிறார். இம்முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப் படிப்பு வரை படித்த, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான ‘www.tnprivatejobs.tn.gov.in’ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் முகாமில் நேரடியாக பங்கேற்கலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142 - 290039) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். நிறுவனங்களும் தொடர்பு கொள்ளலாம் இம்முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் வேலையளிப்பவர்கள் தங்களின் பணியாளர்கள் தேவை மற்றும் ஆட்கள் தேவைப்படும் முழுமையான விவரங்களை ‘deo.cud@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து முன்பதிவு செய்து வேலைவாய்ப்புத் துறையின் ஒப்புதலுடன் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது. எனவே, நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் வரும் 7-ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதும் கிடையாது என்றும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

Post Top Ad