ஜன .31 இல் போலியோ சொட்டு மருந்து முகாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 27, 2021

ஜன .31 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்


வரும் ஜனவரி 31 -ஆம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக தமிழகம் முழுவதும் 43,000 மையங்கள் அமைக்கப்பட உள்ளன . அதன் வாயிலாக மொத்தம் 70 லட்சம் குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கத் திட்ட மிடப்பட்டுள்ளது . இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலி யோவை ஒழிப்பதற்காக , 1994 - இல் இருந்து ஆண்டுதோ றும் , ஜனவரி , மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணை யாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது .

இந்தச் சூழலில் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர்நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில்போலியோ பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது . இதனால் , தற்போது ஆண்டுக்கு ஒரு தவணையாக மட்டுமே சொட்டு மருந்து வழங் கப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் , நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 - ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் அறி வித்தது . ஆனால் , கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது . அதை தொடர்ந்து , அந்த முகாம் வரும் 31 - ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதையடுத்து தமிழகத்தில் , அதற்கான முன்னேற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன.இதுகுறித்து பொது சுகாதா ரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழகத்தில் , 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது .
அதற் காக , அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங் கள் , ரயில் நிலையங்கள் , விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் , முகாம்கள் நடத்தப்பட உள்ளன . தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால் , 43,000 முகாம்கள் அதற்காக அமைக் கத் திட்டமிடப்பட்டுள்ளது . சொட்டு மருந்து வழங்கும் பணி களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர் . போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறை யில் நடைபெற தகுந்த கரோனா தொற்று நெறிமுறைகள் மற் றும் வழிக்காட்டுதலை பின்பற்ற வேண்டும் . முகக்கவசம் அணிந்து , தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண் டும் . கைகளை கழுவ வேண்டும் . கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் . சொட்டு மருந்து கொடுக்கும் ஒவ்வொரு குழந்தையுடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . பெரியவர்கள் , குழந்தைகளுக்கு காய்ச்சல் , இருமல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் அனு மதிக்கக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Post Top Ad