CA தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; திட்டமிட்ட தேதியில் தேர்வு தொடங்கும்: ஐசிஏஐ உறுதி



சிஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் தேர்வு தொடங்கும் என்று ஐசிஏஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, கோவிட்-19 பரவல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு பிஹார் தேர்தல் காரணமாக மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், சிஏ படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சிஏ அடிப்படை, இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள் அனைத்தும் இந்தத் தேதிகளிலேயே நடைபெறும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்ட தேதியில் தேர்வு தொடங்கும் என்று ஐசிஏஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிஏஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்கள் தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தவறான பிரச்சாரம், போலித் தகவல்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். கூடுதல் விவரங்களுக்கு icai.org என்ற இணையதளத்தை மட்டுமே பாருங்கள்'' என்று தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே சிஏ தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தள்ளி வைக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அதற்கு இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive