ஆசிரியர் பணி நியமனமே இல்லை: ஜாக்டோ - ஜியோ குற்றச்சாட்டு :


 

தமிழகத்தில் இந்த ஆட்சியில் ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நியமிக்கப்படவில்லை,' ' என சிவகங்கையில் ஜாக்டோ- ஜியோ நிதிக்காப்பாளர் எஸ்.மோசஸ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை இருந்த ஆட்சியாளர்கள், தேர்தல் நேரங்களிலாவது ஆசிரியர், அரசு ஊழியர்களின் பிரச்னைகளை கேட்டு நிவர்த்தி செய்வர். ஆனால், இந்த அரசு மட்டுமே அரசு ஊழியர், ஆசிரியரின் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி கூட எடுக்கவில்லை.ஆசிரியர்களை நியமித்த ஜெ.,தமிழக அளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது வரை 97 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

இதில், ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே 13 லட்சம் பேர்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், ஏற்கனவே ஆசிரியர் நியமனத்தில் இருந்த நடைமுறையை மாற்றி, வயது வரம்பு 40 என நிர்ணயித்துள்ளது. அதேநேரம் தேசிய கல்வி கவுன்சில் ஆசிரியர் பணிநியமனத்தை ஆயுட்காலம் முழுவதும் நடத்த கூறுகிறது.

இது போன்ற முரண்பாடான தகவல்களை தமிழக அரசு வெளியிடுகிறது. முதல்வராக ஜெ., இருந்த போது கூட 19 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவை வழங்கினார். இந்த அரசு ஒரு ஆசிரியர் பணி நியமனம் கூட செய்யவில்லை.ஆசிரியர் மாறுதலில் முறைகேடு கொரோனாவை காரணமாக கூறி, ஆசிரியர் பணியிட மாறுதல் பொது கவுன்சிலிங்கை நடத்தாமல், விதிகளை மீறி மறைமுக மாறுதல் வழங்குகின்றனர். இதற்காக பல லட்ச ரூபாய் வரை வசூல் நடக்கிறது. பள்ளிகளை உரிய சுகாதார விதிப்படி சுழற்சி முறையில் நடத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளோம், என்றார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive