வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு


 லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு


தமிழகத்தை தலைமைஇடமாக வைத்து செயல்படும், லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளோர், 

  • 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்க கட்டுப்பாடு விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மூலதனப் பற்றாக்குறையால், லட்சுமி விலாஸ் வங்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வங்கி நிர்வாகம், சொத்துக்களை விற்க முடியாமலும் திணறி வந்தது. இந்நிலையில், முதலீடுகளை பெறுவதற்கு அல்லது இணைப்புக்கான முயற்சிகளில், வங்கி ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, 'கிளிக்ஸ் கேப்பிடல்' நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. பண கையிருப்பு குறைந்து, வங்கி சிக்கலில் உள்ளது. இதையடுத்து, 'மொராடோரியம்' எனப்படும், கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமை அளித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  • அடுத்த மாதம், 16 வரை, வங்கிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடன்தாரர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அளிக்கக் கூடாது என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல், வங்கியில் கணக்கு வைத்துள்ளோர், 
  • முதலீட்டாளர்கள், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற்று, அதிக தொகையை எடுத்துக் கொள்ளலாம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive