தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - கருத்துக்கேட்பு கூட்ட முடிவுகளை அன்றே அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.


 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3,000 உயர்நிலைப்பள்ளிகள், 3,000 மேல்நிலை பள்ளிகள், 6,000 தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளில் கருத்துக்கேட்கப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு முடிவுகளை அன்று மாலையே அறிக்கையாக தலைமையாசிரியர்கள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive