உங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி

 :

 

ஃபேமிலி லிங்க்’ என்னும் வசதி மூலம் பெற்றோர்கள் தங்கள் மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டை வரையறை செய்யலாம். இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதுமானது.
இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ மொபைலைப் பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லாக் செய்ய முடியும். அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.


முதல் கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் பெரியவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட இரு தரப்பும் ‘ஃபேமிலி லிங்க்’கைப் பயன்படுத்த ஒப்புதல் தரவேண்டும்.
அதே நேரத்தில் இதைப் பயன்படுத்துபவருக்குக் கண்காணிக்கப்படுவதில் விருப்பம் இல்லையெனில், பெற்றோர்களிடம் பாஸ்வேர்டைப் பகிர வேண்டியதில்லை. பாஸ்வேர்டு பகிரப்படும்போது பெற்றோரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் குழந்தைகள் இருப்பார்கள்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive