பொது மக்களுக்கு தமிழக அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை!


 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மழைக்காலத்தை சமாளிக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தெரிவித்து வருகிறது

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் , எ ரிவாயு , மண்ணெண்ணெய் , மருந்து , பேட்டரிகள் , டார்ச்கள் , முகக்கவசங்கள் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள் என பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive