இது மக்களுக்கான அரசு: பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, November 12, 2020

இது மக்களுக்கான அரசு: பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்புத் தேதி, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

''உலகம் முழுவதும் கரோனா ஆட்கொண்டுள்ள சூழலில், தமிழகத்தில் கோவிட் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கு மக்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

தமிழக அரசைப் பொறுத்தவரை எந்த முடிவையும் தானாக எடுப்பது கிடையாது. தகுந்த ஆலோசனைகளைப் பெற்றே செயல்படுகிறது. இதில் அரசியலை விட அறிவுபூர்வமாக மட்டுமே அணுக வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. எனினும், மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு  குறித்து அறிவிக்கப்பட்டது. எனினும் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள்  பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்கலாம் என்று அறிவுறுத்தினர்.

இது மக்களுக்கான அரசு என்பதன் உதாரணமாக பள்ளிகள் திறப்பு  தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கருத்துக்கு மதிப்புக் கொடுத்து வீண் பிடிவாதம் இல்லாமல் அரசு செயல்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. பொது நோக்கம் மட்டுமே''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார்.

Post Top Ad