ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 14, 2020

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!


மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Data Entry Operator

மொத்த காலிப் பணியிடங்கள் : 6,000

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்குக் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 15.12.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் சோதனை மற்றும் தட்டச்சு சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
பெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Post Top Ad