பள்ளி, கல்லூரிகளில் 30% கட்டணம் குறைக்கப்படுமா? ஆந்திராவை போல தமிழக அரசும் செயல்பட பெற்றோர்கள் கோரிக்கை


ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களில் 30% குறைக்கப்பட்டிருப்பது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா கால நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்களில் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க உதவும் வகையில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை 30% குறைத்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும், மூடப்பட்டதால் அவை இயங்குவதால் ஏற்படும் செலவுகளும், பராமரிப்பு செலவுகளும் பெரிய அளவில் இல்லை என்று கூறியுள்ள ஆந்திர பள்ளிக்கல்வித்துறையின் ஒழுங்காற்று ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழகத்திலும் பலர் கொரோனாவால் வருமானம் இழந்து தவித்து வருவதால் கல்வி கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரியுள்ளனர். ஆந்திர அரசின் முடிவை வரவேற்றுள்ள கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி கட்டணத்தை மட்டுமே வருமான அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். பள்ளிகளுக்கான வருவாயை மாணவர்களின் அறிவாற்றல் மூலமே ஈட்டலாம் என்பது அவர்களின் ஆலோசனை.

பள்ளி, கல்லூரிகளை நடத்துவோர் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர கல்வி நிறுவன மட்டும் முக்கியமாக நினைக்ககூடாது என்பது கல்வியாளர்களின் கருத்து. கல்வி நிலையங்களின் அடிப்படையே மாணவர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கட்டண குறைப்பு பெற்றோர்களின் நெருக்கடியை பெருமளவு தணிக்கும் என்பதால் தமிழக அரசின் முடிவை எதிர்பார்த்து பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive