குரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை (12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள்) - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, November 15, 2020

குரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை (12 ராசிக்காரர்களுக்குமான பலன்கள்)


குரு பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. தனுசு ராசியில் இருந்த குரு பகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். குரு பெயர்ச்சியால் சிலருக்கு பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். 

சிலருக்கு திருமணயோகம் வரும் சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். எந்த ராசிக்கு குரு என்ன பலன்களை தருவார் என்று சுருக்கமாக பார்க்கலாம்.

குரு பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் 1ம் பாதத்திலிருந்து மகரத்தில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை 5 ஆம் தேதி நவம்பர் 20ஆம் வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.

குருவின் பார்வை மகரம் ராசியில் இருந்து ரிஷபம், கடகம், கன்னி ராசிகளின் மீது விழுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சியால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று சுருக்கமாக பார்க்கலாம்.
தொழில் குரு

உங்களுடைய ராசிக்கு 9,12க்குடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நீங்கும். உங்களுடைய தொழில் காரகன் சனி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம். குருவும் சனியும் இணைந்து வேலை தொழிலில் எண்ணற்ற மாற்றங்களை தாரப்போகிறார்கள்.

பாக்ய குருரிஷபம் ராசிக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் குரு அமர்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

அஷ்டம குருமிதுன ராசிக்கு குரு பகவான் 7 மற்றும்10ஆம் வீட்டிற்கு உடையவர் குரு பகவான் இப்போது உங்க ராசிக்கு அஷ்டமத்தில் அமர்கிறார். அஷ்டமச் சனி பாதிப்பை தரும் நிலையில் அஷ்டம குரு வந்து சனியின் பாதிப்பை சற்றே குறைப்பார். தொழில் வேலை விசயங்களில். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

களத்திர குருகுரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் தீரு. குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். அதிக பேச்சு ஆபத்தை ஏற்படுத்தும் மவுன விரதம் நல்லது.

ருண ரோக சத்ரு குருகுரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் இருக்கும் என்றாலும் பல புதிய கடன்கள் வாங்குவீர்கள். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.

பூர்வ புண்ணிய குருகுரு 5ஆம் வீட்டில் அமர்வது யோகம். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1. புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. திருமண யோகம் கை கூடி வரும். என்றாலும் குரு அதிசாரமாக செல்லும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

சுக ஸ்தான குருகுரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். சுக ஸ்தானத்தில் உள்ள குரு சுகங்களை தடுப்பார் எச்சரிக்கையாக இருக்கவும். தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். புது முயற்சிகளில் கவனம் தேவை. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு ஐந்தாம் வீட்டிற்கு அதிசாரத்தில் செல்லும் போது குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

தைரிய குருகுரு பகவான் 3ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் கடந்த ஆண்டுகளில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுடைய கடின முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும் கவனம் தேவை.

குடும்ப குருகுரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.

ஜென்ம குருமகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

விரைய குருகும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும். வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள்.

லாப குருகுரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Post Top Ad