காற்றில் கொரோனா வைரஸை அழிக்கும் கருவி !! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 24, 2021

காற்றில் கொரோனா வைரஸை அழிக்கும் கருவி !!இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வேகமாக பரவி மக்களை கொத்து கொத்தாக கொலைசெய்து வருகிறது கொரோனா வைரஸ். அதேநேரத்தில் கொரோனாவுக்கான மருந்துகள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகளின் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதனால் என்னசெய்வதன்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் காற்றில் பறக்கும் கொரோனாவை அழிக்க புதிய கருவியை பிரபல நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. காற்றில் உள்ள கொரோனா வைரஸைஅழித்து காற்றை சுத்தப்படுத்தும் கருவியை பாரடே ஓசோன் நிறுவனம் தயாரித்துள்ளது. 
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

முக்கியமாக ஏசி அறையில் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. ஏசி அறையில் உள்ள காற்று மீண்டும் குளிரூட்டப்பட்டு உள்ளேயே இருக்கும். கொரோனா வைரஸ் ஏசி அறைக்குள் வந்துவிட்டால் சில மணி நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

எனவே, காற்றில் உள்ள கொரோனா வைரஸை அழிப்பதே ஒரே வழி. இதற்காக அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் R500S மாடல் கருவியை பாரடேஓசோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக வீரியம்மிக்க ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்து 50-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. R500S கருவி ஐரோப்பிய உயர்தர சிஇ சான்றிதழை பெற்றுள்ளது. இந்த மாடலை அறையில் பொருத்தினால் அதில் இருந்து வெளிப்படும் அதிதீவிர ஆக்சிஜன் வாயு, ஒரு மேகம் போல ஒவ்வொரு நிமிடமும் வெளிவந்து ஏசி அறையில் உள்ள கொரோனா வைரஸை அழித்துவிடும். பின்னர் அது மனிதர்களுக்கு ஏற்ற ஆக்சிஜன் காற்றாக மாறிவிடும்.

அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் கருவி இப்போதுவிற்பனைக்கும், மாத வாடகைக்கும் கிடைக்கும். (தொடர்புக்கு: யார்க் இந்தியா 9790788817), என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad