12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் : ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை


 



தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை : 


கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவருகின்ற சூழ்நிலையில் தமிழக சுகாதாரத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற சூழ்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன், காரணம் என்னவென்றால் காலையில் பள்ளிக்கு வருதற்கு முன் சுகாதாரத்துறை அறிவித்திருக்கின்ற கட்டுப்பாடோடு வருவார்களா பள்ளியில் இருந்து வெளியில் செல்லும்போதும் கட்டுப்பாடோடு செல்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது.  



மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசையும் தமிழக பள்ளிக்கல்வித்துறையையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் , மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தபால் வாக்குகளை பெரும்பாலானோர் செலுத்திய நிலையில் மீதம் உள்ள அரசு ஊழியர்கள் 100% விழுக்காடு ஒருநாள் சிரமத்தை பெரியதாக எண்ணாமல் எதிர்காலத்தை மனதில் வைத்தும் நாம் பட்ட இன்னல்களை நினைத்தும் அனைவரும் தபால் வாக்கினை செலத்த வேண்டுமாய் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive