WhatsApp மூலம் மாணவர்களுக்கு திறனறி தேர்வு??? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, April 12, 2021

WhatsApp மூலம் மாணவர்களுக்கு திறனறி தேர்வு???



தமிழகத்தில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலை யில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை அறிய வாட்ஸ் அப் மூலம் சிறப்பு தேர்வு நடத்த திட்டமி டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது . தமிழகத்தில் கொரோனா 2 ம் கட்ட அலை பரவல் மீண்டும் அதிக ரித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் கல்வித்திறன் குறையுமோ என கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் அச்சமும் நீடிக்கிறது. ஒரு சில பெற்றோர் இணையதளம் மூலம் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து பரிசீலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர். 


நடப்பு கல்வியாண்டில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மிக குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தை இணையதளம் மூலம் கற்பதில் பல மாணவர்களுக்கு சிரமங்கள் உள்ளன. இதனிடையே பொதுத்தேர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறனறி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் இந்த ஆண்டு கற்ற கல்வியையும் அவர்கள் புரிந்து கொண்டதையும் மதிப்பிட முடியும் என கருதுகின்றனர். மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கேள்விகளை அனுப்பி பதில்கள் பெற்று அவர்களது திறன் அறியப்படும் எனத்தெரிகிறது. இதனிடையே மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திறனறித் தேர்வுக்காக பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் கூறப்ப இத்தகைய தேர்வு நடத்த முடிவு செய்திருந்தால் ஆசிரியர்கள் , மாணவர் , பெற்றோருக்கு உரிய அவகாசம் கொடுக்கவேண்டும். குறைந்தது ஒன் நரை மாதங்கள் அவகாசம் அளித்து இதை நடத்தினால் மாணவர்கள் மன அழுத்தமின்றி இத்தேர்வை தனியாக எழுத முடியும் என சில பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கல்வித்துறை வட்டாரத் தில் கேட்டபோது இது குறித்த அதிகாரப்பூர்வ தெளிவான உத்தரவு கல்வித்துறையில் இருந்து இன்னும் வரவில்லை . வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.






Post Top Ad