3,550 பட்டதாரி ஆசிரியர் உட்பட 4,970 பணியிடங்களுக்கு 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல் - அரசாணை வெளியீடு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 28, 2021

3,550 பட்டதாரி ஆசிரியர் உட்பட 4,970 பணியிடங்களுக்கு 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல் - அரசாணை வெளியீடு.சுருக்கம் - பள்ளிக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என பொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் [பக50] துறை அரசாணை (டி) எண்.62
நாள் 26.04.2021 திருவள்ளுவராண்டு 2052, பிலவ வருடம், சித்திரை 13
படிக்கப்பட்டவை : - * * அரசாணை (நிலை) எண்.198, பள்ளிக் கல்வித் (சி2) துறை, நாள் 07.12.2011. அரசாணை (நிலை) எண்.38, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 18.02.2016 அரசாணை (1டி) எண்.320, பள்ளிக் கல்வித் (அகஇ துறை, நாள் 24.05.2017. அரசாணை (1டி) எண்.2018, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 23.04.2018. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண் 001512/ எல்இ3/ 2021, நாள் 29.01.2021 ஆணை :- | மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2011-12 ஆம் கல்வியாண்டிற்கு 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளுக்கும், ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் விதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணைகள் வெளியிடப்பட்டன.
2. மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான 2013-14ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவில் 2011-12ல் அனுமதிக்கப்பட்ட 710 உயர்நிலைப் பள்ளிகளில் 158 பள்ளிகளுக்கான ஒப்புதல் நீக்கம் செய்யப்பட்டது. எனினும், இப்பள்ளிகள் மாணவர்களின் கல்வி நலன் கருதி தொடர்ந்து செயல்பட அனுமதித்தும், இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான செலவினம் மாநில நிதியில் மேற்கொள்ள அனுமதித்தும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு ஆனை வழங்கப்பட்டதால் மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், இப்பணியிடங்களுக்கான செலவினத்திற்கான கணக்குத் தலைப்புகள் குறித்து திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. 3. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்குறிப்பிட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 1,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் அன. இப்பாளிகனான தினவருக்...
பணியிடங்கள் ஆக மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
4.தற்போது இப்பணியிட தொடர் நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்துள்ளதால், இப்பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் அரசினை வேண்டியுள்ளார்.
5. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டு, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 2011-12ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இவ்வரசாணையின் இணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தோற்றுவிக்கப்பட்ட 3,550 பட்டதாரி ஆசிரியர் (புதிய ஊதிய விகிதம் : நிலை-16, ரூ.36,400-1,15,700) பணியிடங்க ளும், 710 ஆய்வக உதவியாளர் (புதிய மாதிய விகிதம் = நிலை-5, ரூ.18,200-57,900) பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் (புதிய ஊதிய விகிதம் : நிலை-8, ரூ.19,500-52,000) பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 6. மேலே பத்தி 5ல் தொடர்நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில் இவ்வரசாணையின் இணைப்பு-1ல் உள்ள 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 2,760 ஆசிரியர் மற்றும் 1,104 அலுவலக பணியாளர்கள் ஆக மொத்தம் 3854 பணியிடங்களுக்கான செலவினம் முதற்காண் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும் : +2202-பொதுக்கல்வி - 02 இடைநிலைக் கல்வி - 109 அரசு இடைநிலைப் பள்ளிகள் - மாநிலச் செலவினங்கள் - KH அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளை நிலை உயர்த்துதல் - 301 சம்பளங்கள்." (த.தொ .கு-2202-02-109-KH-30100)
7. இவ்வரசாணையின் இணைப்பு-1ல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியிடங்களின் சம்பளம் குறித்த செலவினம் கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும் :
*2225- ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் நலன் 0-ஆதிதிராவிடர் நலன் 277 கல்வி - மாநிலச் செலவினங்கள் - AA பள்ளிக் கல்வி." 301- சம்பளங்கள். {IFHRMS DPC 2225-01-277-AA-30100).
2. மேலே பத்தி-5ல் தொடர்நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில் இவ்வரசாணையின் இணைப்பு-ல் உள்ள 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களின் காதியச் செய்வினங்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திலிருந்து உடனுக்குடன் ஈடுசெய்யப்பட்டு, கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் வரவு வைக்கப்பட வேண்டும் :
10202 - கல்விப் போட்டி விளையாட்டுகள், கலையும் பண்பாடும் – 01 பொதுக் கல்வி - 102 இடைநிலைக் கல்வி - AL அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் ஏற்படும் செலவுகளை ஈடு செய்தல்" (த.தொ .கு. (02012-01-102-AL-22101).
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Post Top Ad