பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 17, 2021

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C-02/2021

பணி: Works Engineer/Civil

காலியிடங்கள்: 60

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Works Engineer/S & T
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Electronics and Communication, Electronics and Instrumentation, Computer Science, Instrumentation and Control பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.36,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமீபத்திய புகைப்படம் கையொப்பம், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் அமைப்பில் மாற்றி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM/HRM, Ircon-International Ltd, C-4, District Centre, Saket, New Delhi - 110017.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2021
மேலும் விவரங்கள் அறிய என்ற www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படிதது தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad