மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய பொதுமேலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
தபால்துறை செயலர், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆகியோரும் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சின்னத்துரையின் வழக்கை ஏப்ரல் 28க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது