வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு ஜூன் 18-ல் நுழைவுத் தேர்வு: மே 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 17, 2021

வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு ஜூன் 18-ல் நுழைவுத் தேர்வு: மே 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


 
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு ஜூன் 18-ம் தேதிநுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு மே 6-க்குள் விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் பட்டதாரிகள், இங்கு மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு (FMGE - Foreign Medical Graduate Examination) என்ற நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் வாரியம் (என்பிஇ) நடத்துகிறது.அதன்படி, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பதிவு எண் பெற விரும்பும் நபர், இந்த தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதன்மூலம், விண்ணப்பதாரரின் மருத்துவ திறன் சோதிக்கப்படும்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான எஃப்எம்ஜிஇ தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று (ஏப்.16) தொடங்கியது. அதன்படி, வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த பட்டதாரிகள் https://natboard.edu.in/ என்ற இணையதளம் வழியே வரும்மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 18-ம்தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30-ம் தேதி தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று என்பிஇ அறிவித்துள்ளது.


Post Top Ad