தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: சென்னை வானிaலை ஆய்வு மையம்:


 


தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்க கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக் கூடும் என்றும்,இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive