அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் நேரடி முகவர் தேர்வு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 11, 2021

அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் நேரடி முகவர் தேர்வு


தாம்பரம் அஞ்சல் பிரிவு அறிக்கை: 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் நேரடி முகவர் பதவிகளுக்கான நேர்முக தேர்வு வரும் 25ம் தேதி நடைபெறும். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அதேபோல், படித்த இளைஞர்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், அங்கன்வாடியில் வேலைப் பார்த்தவர்கள், பஞ்சாயத்து துறையில் வேலை பார்த்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வரும் 25ம் தேதியின் படி விண்ணப்பதார்கள்குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 50 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். இப்பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களோடு வரும் 25ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வரவேண்டும்.

Post Top Ad