ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பு 2022- 23ம் ஆண்டு முதல் ரத்து'

'
எல்.எல்.எம்., எனப்படும் முதுகலை சட்டப்படிப்பை ஓராண்டு படிக்கும் நடைமுறை, 2022- 23ம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும் என, உச்ச நீதிமன்ற்த்தில், இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்திய பார் கவுன்சில், கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், 'ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பு, வெளிநாட்டு சட்டப்பல்கலையில் படித்து பெற்ற, ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பின்அங்கீகாரம் ஆகியவற்றை, ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேசிய சட்டப்பல்கலைகளின் கூட்டமைப்பு உட்பட பலர், மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது பற்றி விளக்கம் கேட்டு, பார் கவுன்சிலுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது.அப்போது இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் தன்கா கூறுகையில், 'ஓராண்டு எல்.எல்.எம்., படிப்பு, 2022 - 23ம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும்' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive