மருத்துவப் படிப்புகள் : ஜன .4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 1, 2021

மருத்துவப் படிப்புகள் : ஜன .4 முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வுஎம்.பி.பி.எஸ் . , பி.டி.எஸ் . படிப்புகளுக்கான இரண் டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . நிவர் புயல் காரணமாக 6 நாள்கள் மருத்துவக் கலந்தாய்வு தடைபட் டது.பின்னர் , நிலைமை சீரடைந்தபிறகு மீண்டும் பொதுக்கலந்தாய்வு தொடங்கி 8 நாள்கள் நடைபெற்றது . அதன் பின்னர் எஸ்சி , எஸ்டி பிரி வினருக்கும் , ஐஆர்டி பெருந்துறை , வேலூர் சிஎம்சி கல்லூரி இடங்க ளுக்கும் , நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற் றது . இந்நிலையில் , இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 4 - ஆம் தேதி தொடங்குகிறது . அன்றைய தினம் , அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது . 5 ஆம் தேதி முதல் 11 - ஆம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கும் , 11 - ஆம் தேதி பிற்பகல் முதல் 13 - ஆம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது . இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள் , முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாமல் இருந்த இடங்கள் ஆகியவை நிரப்பப்படவுள்ளன . அகில இந்திய ஒதுக்கீட் டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது .

Post Top Ad