தமிழக வருமானவரித்துறையில் வேலை ( விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021 ) - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 9, 2021

தமிழக வருமானவரித்துறையில் வேலை ( விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021 )



 தமிழக வருமானவரித் துறையில் நிரப்பப்பட உள்ள 38 வருமானவரி ஆய்வாளர், வரி உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்த காலியிடங்கள்: 38


ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: Inspector of Income-tax - 12

சம்பளம்: மாதம் ரூ. 9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600


பணி: Tax Assistant - 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: குறைந்தபட்ச தகுதியாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


பணி: Multi-Tasking Staff (MTS) - 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தகுதி: குறைந்தபட்ச பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். 


மேற்கண்ட பணியிடங்களுக்கு விளையாட்டுத் துறையில், தடகளம் (ஆண்கள்,பெண்கள்), கூடைப்பந்து, மட்டைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், கேரம் போன்ற விளையாட்டுகளில் சாதனையாளர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் துறையில் வெற்றிப்பெற்ற சான்றிதழ்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை:  https://www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2021


மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/12/SPORTS_QUOTA_Notice_5_1_21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad