இடைத்தேர்வு
பொதுத்தமிழ்
இயல் - 3
வகுப்பு: 12 மதிப்பெண் - 30
நேரம் - 1 மணி
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 'குடும்பம்' என்னும் சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் -
அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள்
இ) குறுந்தொகை ஈ) புறநானூறு
2. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) செற்றார் - 1) மகிழ்ச்சி
ஆ) கிளை - 2) காடு
இ) உவகை - 3) பகைவர்
ஈ) கானம் - 4) உறவினர்
அ) 2,4,3,1 ஆ) 3,4,1,2 இ) 2,4,1,3 ஈ) 3,2,4,1
3. Nuclear family - என்பதன் தமிழாக்கம் -
அ) தாய்வழிச்சமூகம் ஆ) பண்பாடு
இ) வாழிடம் ஈ) தனிக்குடும்பம்
4. உரிமைத்தாகம் என்னும் சிறுகதையை இயற்றியவர் -
அ) பாரதியார் ஆ) பூமணி
இ) உத்தமசோழன் ஈ) பாரதிதாசன்
5. செற்றவர் - என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) வினைத்தொகை ஆ)பண்புத்தொகை இ) வினையாலணையும் பெயர் ஈ)இடைக்குறை
ஆ. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.
6. புக்கில்,தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
7. பொருள்கோள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
8. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
9. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
10. திருவளர்ச்செல்வன்,திருவளர் செல்வன் - இவற்றில் சரியான தொடர் எது?அதற்கான இலக்கண விதி யாது?
இ. ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.
11. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக.
12. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
ஈ. ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.
13. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
14. பண்பின் படிமமாக படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையை பாடப்பகுதி வழி நிறுவுக.
உ. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
15. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
16. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
மாணவர்கள்
பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும்.தமது இன்ப
துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
17. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள்மயக்கத்திற்குச் சான்று தருக.
18. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பொலிந்தான்
19. புணர்ச்சி விதி தருக.
அருங்கானம்
ஊ. செய்யுள் வடிவில் விடை தருக. 1×4=4
20. 'துன்பு உளது...' - எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
வினாத்தாள் தயாரிப்பு
கி.அன்புமொழி எம்.ஏ., எம்ஃபில்.,பி.எட்.,
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செம்பனார்கோயில் மயிலாடுதுறை மாவட்டம்
அலைபேசி: 9500274321
0 Comments:
Post a Comment