12th Tamil இயல்-2 அலகுத் தேர்வு - வினாத்தாள் - Unit 2 Question Paper

 இடைத்தேர்வு
வகுப்பு-12          தமிழ்          இயல்-2 
நேரம்: 50 நிமிடங்கள்
மதிப்பெண்: 30
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. ‌                                                          5×1=5
1. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது-
அ)சூரிய ஒளிக்கதிர் ஆ)மழை மேகங்கள் இ)மழைத்துளிகள் ஈ)நீர் நிலைகள்
2.பொருத்தி விடை தேர்க.
அ)குரங்குகள் - 1)கன்றுகளைத் தவிர்த்தன
ஆ)விலங்குகள் - 2)மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ)பறவைகள் - 3)குளிரால் நடுங்கின
ஈ)பசுக்கள் - 4)மேய்ச்சலை மறந்தன
அ)1,3,4,2 ஆ)3,4,2,1 இ)3,2,1,4 ஈ)2,1,3,4
3. தமிழில் திணைப்பாகுபாடு-------------------
அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ)பொருட்குறிப்பு ஆ)சொற்குறிப்பு
இ)தொடர்க்குறிப்பு ஈ)எழுத்துக்குறிப்பு
4.MUSEUM என்பதன் தமிழாக்கம்
அ)ஆவணக்காப்பகம் ஆ) அருங்காட்சியகம் இ)வன்பொருள் ஈ) மென்பொருள்
5. முதல்கல் என்னும் சிறுகதையின் ஆசிரியர்
அ)பூமணி ஆ)பாரதியார் இ)உத்தம சோழன் ஈ) அய்யப்ப மாதவன்

ஆ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.            3×2=6
6.'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'-விளக்கம் தருக.
7. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
8. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
9. மறக்கக்கூடாதது மறக்கக்கூடியது எவற்றை?

இ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.‌‌                       

                                         1×4=4
10. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
11."அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

ஈ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக. ‌                               

ஊ)செய்யுள் வடிவில் விடை தருக. 4+2=6
17.'மாமேயல்..எனத் தொடங்கும் நெடுநல்வாடை பாடலை எழுதுக.
18. சினம் என முடியும் குறளை எழுதுக.
வினாத்தாள் தயாரிப்பு
கி.அன்புமொழி எம்.ஏ., எம்ஃபில்.,பி.எட்.,
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செம்பனார்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம்
அலைபேசி: 9500274321





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code