தமிழ் இடைத்தேர்வு -2025
இயல்-1(அலகுத் தேர்வு)
வகுப்பு-12 மதிப்பெண்- 30
நேரம் - 50 நிமிடங்கள்
அ)சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5×1=5
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும் ஆ) இசுலாமும் தமிழும் இ) சமணமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க.
அ) அடிமோனை,அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை இ) அடிஎதுகை,சீர்மோனை ஈ) சீர் எதுகை,அடிமோனை
3.Fine Arts என்பதன் தமிழாக்கம்
அ) கள ஆய்வு ஆ) கவின்கலைகள்
இ) தொல்லியல் ஈ) ஆராய்ச்சி
4. பசும்பூண்பாண்டியன் கொடியின் சின்னம்
அ) புலி ஆ) மீன் இ) யானை ஈ) வில்
5. வெங்கதிர் என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ)அன்மொழித்தொகை
ஆ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3×2 =6
6. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
7. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட,தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
8. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
9. பொருள் வேற்றுமை அணி என்றால் என்ன?
இ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.
10. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்"- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
11. மயிலை சீனி.வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
ஈ) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடை தருக.
12. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
13. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
உ) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
14. தமிழாக்கம் தருக.
A new language is a new life
15. உவமைத் தொடரை சொற்றொடரில் அமைத்து எழுதுக.
தாமரை இலை நீர்போல
16. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
விளங்கி
17. புணர்ச்சி விதி தருக.
வானமெல்லாம்
18. இலக்கணக்குறிப்பு தருக.
முத்துமுத்தாய்
ஊ) செய்யுள் வடிவில் விடை தருக.
19. 'ஓங்கலிடை' எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
வினாத்தாள் தயாரிப்பு:
.கி.அன்புமொழி எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எட்.,
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செம்பனார்கோவில்
0 Comments:
Post a Comment