TNPSC - தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, April 3, 2021

TNPSC - தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பு.



தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Draughting Officer (Highways Department)
காலியிடங்கள்: 177 + 6
பணி: Junior Draughting Officer (Public Works Department)
காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400
பணி: Junior Engineer (Fisheries Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500
தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.07.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். ஏற்கனவே ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2021 மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post Top Ad