CPS திட்டத்தை இரத்து செய்ய கோரி திண்டுக்கலைச் சேர்ந்த பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவரால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு WP(MD) 3802/2012 நேற்று வெள்ளிக்கிழமை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.
வழக்கறிஞர் திரு. லஜபதிராய் ஆஜராகி CPS வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் அரசு
எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும்
ஓய்வூதியம் என்பது ஒரு அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதிய பலன்கள் எதுவுமே இல்லை என்று வாதம் செய்தார்.
வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட நீதியரசர் தண்டபாணி அவர்கள் இறுதி விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.