என் தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்குகள்!” - முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் சிறுவன்:

 

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில் ,  சிறுவன் தனது தந்தைக்கு பணி நிரந்தர ஆணை வழங்க தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக கூறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் வரும் அந்த சிறுவன் தனது பெயர் சிபிசெல்வன் என்றும், தனது தந்தை பெயர் தனகோபால் என்றும் கூறியுள்ளான்.  தொடர்ந்து தனது தந்தை மூன்று அரை நாட்கள் மட்டும் பள்ளிக்கு வேலைக்கு செல்வதாகவும், அதனால் வரும் வருமானம் தங்களுக்கு போதவில்லை என்றும், ஏதாவது வாங்க வேண்டுமென்றால் கூட அதற்கு காசு இருப்பதில்லை என்றும் கூறுகிறார். மேலும் தான் ஏழாவது படிப்பதாகவும் தனது சகோதரி கல்லூரி படிப்பதாகவும் ஆனால் அதற்கு போதிய பண வசதி அவர்களிடத்தில் இல்லை என்றும், ஆதலால் பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் தனது தந்தைக்கு பணி நிரந்தரம் வழங்குங்கள் என கூறி கண்ணீர் விட்டு அழுது தமிழக முதல்வருக்கு வீடியோவில் கோரிக்கை வைக்கிறான் அந்த சிறுவன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, வாழ்க்கை கல்வி உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களாக 16,500 பேரை நியமித்தார். இவர்களுக்கு வாரத்தில் மூன்றரை நாட்கள் பணிநாட்களாக அறிவிக்கப்பட்டது. அதற்கு சம்பளமாக ரூ.5 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2017 ம் ஆண்டு 7 ஆயிரத்து 700 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று மேலும் 2,300 ரூபாய் ஊதிய உயர்வு அளித்து தற்போது சம்பளம் ரூ 10,000 மாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்பணிபுரிந்து வருகின்றனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive