பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு வாரமாக காத்திருப்பு போராட்டம் : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 9, 2021

பகுதிநேர ஆசிரியர்கள் ஒரு வாரமாக காத்திருப்பு போராட்டம் :


 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மாதத்தில் 12 நாள் பணிபுரிவதால், மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இருப்பினும் இவர்கள் தங்கள் திறமையினால், மாணவர்கள் பல்வேறு சாதனைகள் புரிய காரணமாக இருக்கின்றனர்.
10 கல்வி ஆண்டாக பணிபுரியும் இவர்களுக்கு, இந்த மாதம்தான் 7700-ல் இருந்து 10,000 ரூபாயாக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.

குறைந்த ஊதியத்தில் வாழ்க்கையை நடத்த முடியாமல், பலர் வறுமையில் வாடி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர், பலர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய, எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

குறிப்பாக பணி இடமாறுதல், மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு, இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணபலன்கள் போன்றவையாகும்.

எனவே மாணவர்கள் மற்றும் 12000 குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு, இவர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஒரு வாரமாக, சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை (DPI) வளாகத்தில் "காத்திருப்பு போராட்டத்தில்" ஈடுபட்டு வருகின்றனர்

Post Top Ad