தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தேர்தல் நடைமுறையில் இதுவரை வாக்காளர் பெயர் பட்டியல் காகித ஆவணங்களாக மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சில மனித தவறுகளால் குளறுபடி ஏற்படுவதால் வாக்காளிக்க வருபவர்கள், சோதனைகளை முடிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் தவிர்க்க தற்போது , தேர்தல் ஆணையம் 'பூத் ஆப்' ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் தேர்தல் ஆணைய கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். என்கிரிப்டட் முறையில் வாக்காளர்கள் தகவல்களை சேகரித்து தனித்தனியாக வாக்காளர்களின் பெயர், விலாசம், பூத் எண் போன்ற பிற தகவல்களை சேர்த்து கியூஆர் கோடு ஒன்றை உருவாக்கித் தரும். இந்த கியூஆர் கோடு பூத் சிலிப்களில் அச்சிடப்பட்டு வாக்காளர்களுக்கு தரப்படும். அல்லது இணையதளம், ஆப் மூலமும் கியூஆர் கோடை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்குச்சாவடியில் தேர்தல் ஊழியர்கள், ஸ்கேன் செய்யும் போது,பெறப்படும் வாக்காளர்கள் தகவல்களிள் அடிப்படையில் போலி வாக்காளர்களை எளிதில் அடையாளம் கண்டறிய முடியும். இந்தியாவில் தற்போது முதன்முறையாக இந்த ஆப்பை மேற்கு வங்க தேர்தலில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.